Header Ads

  • சற்று முன்

    சிறைவாசம் நீட்டிக்கப் பட்ட தென்கொரிய முன்னாள் அதிபருக்கு வாதாட புதிய வழக்கறிஞர் குழு நியமனம்.


    தென்கொரியாவின் முன்னாள் அதிபர் சார்பாக வாதாட புதிய வழக்கறிஞர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
    தென்கொரியாவின் முன்னாள் அதிபர் (Park Geun-hye) பார்க் ஜியூன்-ஹை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊழல், பதவியை தவறாக பயன்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக பதவி பறிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தென் கொரியாவின் சட்டத்தின் படி விசாரணைக் கைதி 6 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்படக் கூடாது என அவரது வழக்கறிஞர் குழு வாதாடியது. ஆனால், மீண்டும் ஒரு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை முன்னாள் அதிபரின் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அவரது வழக்கறிஞர் குழு ராஜினாமா செய்தது. இந்நிலையில், முன்னாள் அதிபர் சார்பாக வாதாட ஐந்து வழக்கறிஞர்கள் அடங்கிய புதிய குழுவை தென்கொரிய நீதிமன்றம் நியமித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad