போஸ்டா் அடித்து தேடும் தொகுதி மக்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை காணவில்லை.
போஸ்டா் அடித்து தேடும் தொகுதி மக்கள்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை காணவில்லை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சண்முகம். இந்தநிலையில் இவரை காணவில்லை எனக்கூறி ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டாில், ``எங்கே போனார் எம்.எல்.ஏ.- ஊரெல்லாம் டெங்கு... உயிரை பறிக்குது... சதுரடி வாரியாக குடிநீருக்கு வரி... கூடுதல் டெபாசிட்... குப்பைக்கு வரி விதிப்பு... புதிய வரி சீராய்வு... மக்களுக்காக மாநகராட்சியா? மக்களை வாட்டும் மாநகராட்சியா...? கேட்பதற்கு நாதியில்லை... கேட்க வேண்டிய தொகுதி எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகத்தை காணவில்லை... எம்.எல்.ஏ.வை தேடி கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் - இப்படிக்கு, கிணத்துக்கடவு தொகுதி மக்கள்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை