ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பு.
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 2017 டிசம்பர் 31-ல் இருந்து 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு கூறியிருந்தது.
ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு கூறியிருந்தது.
இதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை அறிவித்திருந்தது. ஆனால், ஆதார் எண்ணை இணைக்காததால் அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆதார் எண் இணைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை