டிவில்லியர்ஸின் சாதனை முறியடிப்பு விராத் கோஹ்லி...
டிவில்லியர்ஸின் சாதனை முறியடிப்பு விராத் கோஹ்லி...
கான்பூர்: ஒரு நாள் போட்டிகளில் 9,000 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸின் சாதனையை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்தார்.
இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதல் இரு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி கான்பூரில் இன்று நடைபெறுகிறது. இதனால் இந்த போட்டியே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டாஸை வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தற்போது அணியின் கேப்டன் விராத் கோஹ்லி விளையாடி வருகிறார். கோஹ்லி தனது ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 8,917 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் 83 ரன்கள் எடுத்தால் 9,000 ரன்களை பெற்று விடுவார் என்ற நிலை இருந்தது.
இதையடுத்து இந்த போட்டியில் அபாரமாக விளையாடி வரும் விராத் கோஹ்லி 9,000 ரன்களை கடந்துவிட்டார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.
முன்னதாக டிவில்லியர்ஸ் 205 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,000 ரன்களை குவித்திருந்தார். ஆனால் கோஹ்லி 202 போட்டிகளிலேயே அத்தகைய ரன்களை குவித்து டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்துவிட்டார்.
மேலும் இந்த போட்டியில் தனது 32-ஆவது சதத்தையும் அடித்துவிட்டார் கோஹ்லி. இன்றைய போட்டியில் 96 பந்துகளில் 1 சிக்ஸரையும், 8 பவுண்டரிகளையும் விளாசினார் கோஹ்லி.
கருத்துகள் இல்லை