• சற்று முன்

    காற்றே உந்தன் கீதம் என்ற பாடலை இனி கச்சேரிகளில் ஜானகியின் குரல் கேட்காது !

    காற்றே  உந்தன்  கீதம் என்ற பாடலை 
    இனி கச்சேரிகளில்  ஜானகியின்  குரல் கேட்காது  !
    தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் 3 வயதிலிருந்து அவர் தனது கச்சேரியை தொடங்கினார்.
    இசைக்குயில் பரபலமானது அன்ன கிளி ....
    அன்னக்கிளி படத்தில் இவர் பாடிய அன்னக்கிளி உன்னை தேடுதே பாடல் இன்றும் கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. அதேபோல் 16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... , கடலோர கவிதைகள் படத்தில் அடி ஆத்தாடி என் மனசுல...., ஜானி படத்தில் காற்றில் எந்தன் கீதம்..., தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா... சங்கமம் படத்தில் மார்கழி திங்கள் அல்லவா ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
    சினிமாவில் படுவதை நிறுத்தினர் 
     கடைசி கச்சேரி என அறிவிப்பு 79 வயதாகும் ஜானகியின் குரல் இன்றும் அவர் பாடிய முதல் பாடலின் குரல் போல் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய பெருமையை பெற்ற அவர் சினிமாவில் பாடுவதில்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார். இந்நிலையில் ஜானகி சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை மூலம் மன நலம் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டி வருகிறார்.
    பாடகர்களும் வருத்தம் 
    இவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது. சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதால் இவரது குரலை இசைக் கச்சேரிகளில் கேட்டு ரசித்தனர். தற்போது இசைக் கச்சேரிக்கும் முழுக்கு போட்டு விட்டதால் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூத்த கலைஞர்கள் ஜெயந்தி, பாரதி விஷ்ணுவர்தன், ஹரிணி, ராஜேஷ், சிவ்ராம், ஹேமா சவுத்ரி உள்ளிட்டோரும் வருத்தமடைந்தனர்.

    கடைசி கச்சேரி என அறிவிப்பு 
    மன நலம் பாதித்த குழந்தைகளுக்காக நிதி திரட்ட வேண்டி நேற்று மைசூரில் மனசாகனோத்ரி என்ற இடத்தில் ஆம்பி தியேட்டரில் இசைக் கச்சேரியை நடத்தினார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் கூறுகையில், என்னுடைய தொழிலால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். புதிய மற்றும் இளம் கலைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக நான் இனி இசைக் கச்சேரிகளிலும் பாடமாட்டேன். மைசூர் கச்சேரிதான் எனது கடைசி கச்சேரி என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad