மேயாத மான் ப்ரியா பவானிக்கு அடித்த ஜாக்பாட்!
சின்னத் திரையிலிருந்து மேயாத மான் மூலம் பெரிய திரைக்கு வந்த ப்ரியா பவானி சங்கருக்கு எடுத்த எடுப்பிலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேயாத மான் படத்தில் ப்ரியா பவானிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் பார்த்தபல முன்னணி நடிகர்கள் ப்ரியா பவானியைப் பாராட்டுவதோடு, நடிக்க வாய்ப்பும் தருகின்றனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில்
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ப்ரியா பவானி ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்பட்டது.
விஜய் சேதுபதி ஜோடியாக
அடுத்து கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜூங்கா படத்தில் நடிக்க உள்ளதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக ப்ரியா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொரு புதுப்படத்தில்
மேலும் அருள்நிதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றிலும் ப்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
டாப் கியரில்
கீர்த்தி சுரேஷ் மாதிரி எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் போகிறது ப்ரியா பவானியின் சினிமா கிராஃப்!
கருத்துகள் இல்லை