மழை வரும் பின்னே !! எச்சரிக்கை வரும் முன்னே!!
மழை வரும் பின்னே !! எச்சரிக்கை வரும் முன்னே!!
சென்னையில் பருவமழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப்பருவமழை நாளை முதல் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து, அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால், சென்னை ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வெள்ளக்கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் தங்களுடைய மழை பாதிப்பு குறித்த புகார்கள 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் 044-2536 7823, 2538 4965 / 3694 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
தற்போதைய வானிலை நிலவரப்படி, நாளைக்குள்ண வடகிழக்குப் பருவமழை துவங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஈரக்காற்று கிழக்கு திசை நோக்கி வீசி வருவதாகத் தெரிவித்தார்.
இதனால், தமிழகத்தின் மதுரை சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், இது படிப்படியாக வலுப்பெற்று வடகிழக்குப் பருவமழைக்கு சாதகமான சூழலை உருவாக்குவாதகவும் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மிதமான மழையும், சென்னையைப் பொருத்த வரையில், விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை