Header Ads

  • சற்று முன்

    ரேஷன் கடைகளில் சக்கரை விலை உயர்வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பகீர் பேட்டி

    ரேஷன் கடைகளில் சக்கரை விலை  உயர்வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பகீர் பேட்டி

    Image result for minister sellur rajuசென்னை:ரேஷன்கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரணமானதுதான் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.5 என்று வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஒரு கிலோ சர்க்கரை விலையை ரூ.25 என தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

    பொதுமக்கள் மத்தியில் இந்த விலை உயர்வு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டுறவு சங்க கடைகளில் போதுமான கையிருப்பு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும். நியாயவிலை கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டால் கூட, அருகேயுள்ள பிற பகுதிகளில் திறக்கப்படும். சர்க்கரை விலையேற்றம் சாதாரணமானதுதான். எதிர்க்கட்சிகள் என்றால் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். டெங்கு பிரச்சினை பெரிதான நிலையில், இப்போது அது சரி செய்யப்பட்டுள்ளது 3 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் டெங்கு ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad