அடாது மழை கொட்டினாலும் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: சென்னை மாவட்ட ஆட்சியர்
சென்னை போரூர், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, அடையாறு, உள்ளிட்ட இடங்களில் இடியுடன் நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சாலைகளில் தண்ணீர் பெருக்கு மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பள்ளி கல்லூரிகள் இயங்கும் இந்நிலையில் மழை பெய்தாலும் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்துள்ளார்.
கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் மழையால் சென்னையின் அண்ணாசாலை, வடபழனி உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் அவதியடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை