Header Ads

  • சற்று முன்

    ஊசி போடாதீங்க; அப்புறம் பேஜார் ஆயிடும்; எச்சரிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்!

    Untitled-1-45

    டெங்கு பாதிப்பா? ஊசி போடாதீங்க; அப்புறம் பேஜார் ஆயிடும்; எச்சரிக்கும் அமைச்சர் ...

    சிவகங்கை: டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் ஊசி போட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காய்ச்சல் தீவிரத்தை அறியாத மாநில அரசு, மெத்தனப் போக்கை கடைபிடித்தது. நாளுக்கு நாள் உயிர் பலி தொடர்வதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காலம் தாழ்த்தியே டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
    டெங்குவிற்கு மூலக் காரணமாக விளங்கும் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வீடுகள்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
    அப்போது டெங்கு காய்ச்சலுக்கு ஊசி போடும்படி மருத்துவர்களை வற்புறுத்தக் கூடாது என்று தெரிவித்தார். அவ்வாறு செய்தால் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டால் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad