கூவம் நதிக்கரையில் குடியிருந்த 170 குடும்பங்கள் அகற்றம்.!
கூவம் நதிக்கரையில் குடியிருந்த 170 குடும்பங்கள் அகற்றம்.!
கூவம் ஆற்றுப்பகுதியில் குடியிருந்த 170 குடும்பங்களை வெளியேற்றி மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆக்கிரமிப்பை மீறி கட்டப்பட்ட, கட்டடங்களையும், குடியிருப்புகளையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. அதன் படி கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகள், மாநகராட்சி நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, இன்று கூவம் ஆற்றுப்பகுதியில் உள்ள கிழக்கு நமச்சிவாய நகரில் ஆக்கிரமித்து குடியிருந்து 170 குடும்பங்களையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. தங்களுக்கென்று இருந்த இருப்பிடத்தையும் எடுத்துக் கொண்டதால் இப்போது எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
கருத்துகள் இல்லை