Header Ads

 • சற்று முன்

  பணத்திற்காக 'நிக்கா' என்ற பெயரில் விற்கப்படும் பெண்களின் சோகக் கதை!

  செவிலியராக வேண்டும் என்பதே ஃபர்ஹீனுக்கு பெருங்கனவாக இருந்தது. ஆனால், ஜோர்டானை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவருக்கு அவர் திருமணம் முடிக்கப்பட்ட போது, ஃபர்ஹீனுக்கு வெறும் 13 வயதே ஆனது.
  ''எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்க வேண்டும் என்று அப்போது கத்தினேன், கதறினேன், கெஞ்சினேன். ஆனால், எனது அழுகையை யாரும் பொருட்படுத்தவேயில்லை,'' என்கிறார் அவர்.
  மணமகள் உடையில் ஃபர்ஹீனை அவரது தயார் அலங்காரப்படுத்தினார். திருமணத்திற்காக 25,000 ரூபாயும், அதன்பிறகு மாதம் 5,000 ரூபாயும் அவர்கள் வழங்குவார்கள் என்று ஃபர்ஹீனிடம் தாயார் கூறியுள்ளார்.
  முஸ்லிம் மதகுரு ஒருவர் சடங்குகளை செய்துவைக்க ஜோர்டான் நபருடன் ஃபர்ஹீனுக்கு திருமணம் நடைபெற்றது.திருமணத்துக்கு பிறகு ஜோடிகள் தனிமையில் இருந்தபோதுதான், மணமகனின் முகத்தை ஃபர்ஹீன் முதல்முறையாக நேரில் பார்த்துள்ளார்.
  தன்னைவிட 40 வயது மூத்தவர் என்பதை ஃபர்ஹீன் அப்போதுதான் உணர்ந்தார்.
  ''அன்றைய இரவு, நான் அழுது கொண்டேயிருக்கே அவன் என்னுடன் கட்டாயமாக பாலுறவு கொண்டான். அதன்பிறகு, மூன்று வாரங்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தான்,'' என்று அந்த கொடிய நிமிடங்களை மீண்டும் நினைவுக்கூர்ந்தார் ஃபர்ஹீன்.
  தன்னுடன் ஜோர்டானுக்கு வந்தது தனது மனைவிகள் மற்றும் பிள்ளைகளை பார்த்துகொள்ளமாறு ஃபர்ஹீன் கணவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஃபர்ஹீன் மறுத்துள்ளார்.
  அதன்பிறகு, இருதரப்பிடையே ஒரு சமரசம் செய்யப்பட்டது. முதலில் தான் ஜோர்டானுக்கு சென்று அதன்பிறகு ஃபர்ஹீனுக்கு விசா அனுப்புவதாக ஃபர்ஹீன் கணவர் தெரிவித்துள்ளார்.
  காலங்கள் உருண்டோடின ஃபர்ஹீனுக்கு விசா மட்டும் வரவில்லை. ஃபர்ஹீன் இன்னும் திருமணமானவர்தான் ஆனால் தன் கணவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது.
  ''என்னுடைய பெற்றோராலே நான் ஏமாற்றப்பட்டேன். இந்த திருமண பந்தத்தை முடித்துகொள்ள கூட நான் எண்ணினேன் என்கிறார் ஃப்ர்ஹீன்.
  ''வயது மூத்த ஆணை திருமணம் செய்ததற்காக எனது உறவினர்கள் என்னை கேலி செய்தார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று, கணவனின் ஆசைகளை திருப்திபடுத்த முடியாதததால்தால் அவர் என்னைவிட்டு சென்றுவிட்டதாகவும் வசைப்பாடினார்கள் '' என்கிறார் ஃபர்ஹீன்.
  இந்த மோசடி திருமணம் குறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில் தெலங்கானா காவல் துறையிடம் பதியப்பட்ட 48 வழக்குகளில் ஃபர்ஹீன் வழக்கும் ஒன்று.
  ஃபர்ஹீன் காவல்துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார். ஆனால், கைதானது வெறும் தரகர் மட்டுமே. காரணம், ஷேக்குகள் இந்திய பிரஜைகளல்ல.
  ஹைதராபாத் காவல்துறையின் தெற்கு பகுதியின் துணை ஆணையராக இருக்கிறார் வி சத்தியநாராயணா.
  ''பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் நேரடியாக எங்களை அணுகுவதில்லை. ஆனால், அவர்களை திருமணம் முடித்த ஷேக் மணமகளை தவிக்கவிட்டு சொந்த நாட்டிற்கு தப்பிச்சென்றவிட்ட பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களிடம் வருகிறார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். பிறகு நாங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்புகொள்வோம். அப்படிப்பட்ட சூழலில் கூட தப்பிச்சென்ற ஷேக்குகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியம் என்பது மிகவும் குறைவு'' என்கிறார் அவர்.
  அவர்கள் அவ்வாறு வரும்போது, அவர்களை திருமணம் முடித்த ஷேக் நாட்டில் இருப்பதில்லை.
  கடந்த செப்டம்பர் மாதம், எட்டு ஷேக்குகளை கொண்ட குழு ஒன்றையும், 35 இடைத்தரகர்களையும் தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது.
  80வயதுடைய முதியவர்கள் ஷேக்குகள் குழுவிலிருந்து குறிப்பிடத்தக்கது.
  ஆனால், இதுபோன்ற திருமணம் மோசடிகள் பெரும்பாலானாவை காவல்நிலையத்திற்கு வருவதில்லை. காரணம், 12 முதல் 17 வயதுவரை உள்ள இளம் பெண்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
  தபாஸம் திருமணம் முடித்த போது அவளுக்கு வயது 12 தான். ஆனால், 70 வயதுடைய முதியவருக்கு தபாஸம் திருமணம் முடிக்கப்பட்டார். திருமணத்திற்கு பிறகு ஹோட்டல் ஒன்றுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
  பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தபாஸம் ஒரு வாக்குறுதியுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதாவது, அவரது கணவர் விரைவில் விஸா அனுப்பி வைப்பார் என்பதே ஆகும்.
  அடுத்த ஆண்டே தபாஸம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், வெளியுலகத்திற்கு பொறுத்தவரை அவர் தபாஸத்தின் தங்கை.
  ''ஒவ்வொரு முறையும் நான் பெற்றெடுத்த பிள்ளை என்னை அக்கா என்று கூப்பிடும்போது எனது இதயம் நொறுங்குகிறது, என்னுடைய மகள் என்னை அம்மா என்று கூப்பிடுவதற்காக ஏங்கிக் காத்துகிடக்கிறேன்,'' என்கிறார் தபாஸம்.
  பெரும்பாலான ஷேக்குகள் ஓமன், கத்தார், செளதி அரேபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றனர்.
  சில திருமணங்களில் சம்பந்தப்பட்ட ஆண் இந்தியாவுக்கு பயணப்பட வேண்டும் என்று அவசியமில்லை. 15 வயதுடைய ஸெஹரா விஷயத்தில் இப்படிதான் நடத்தது. ஆதரவற்றிருந்த ஸெஹரா தனது பாட்டியுடன் வளர்ந்து வந்தார்.
  ஸெஹராவுக்கு தெரியாமலே அவளது புகைப்படத்தை உறவினர் ஒருவர் சமூக ஊடக தளம் ஒன்றில் விற்கும் நோக்கில் பயன்படுத்தியுள்ளார்.
  ''அன்றைய இரவே முஸ்லிம் மதகுரு ஒருவர் வீட்டிற்கு வந்து தொலைப்பேசி மூலம் திருமணத்தை நடத்தி வைத்தார். நான் யாருக்கு திருமணம் முடிக்கப்படுகிறேன் என்பது கூட எனக்கு தெரியாது,'' என்கிறார் ஸெஹரா.
  விரைவில் ஸெஹராவுக்கு ஏமனிலிருந்து விசா வருகிறது. அங்கு, 65 வயதுடைய நபர் ஒருவர் ஸெஹராவின் கணவர் என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். பின்னர், ஸெஹராவை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்கிறார்.
  ''வலுக்கட்டாயமாக என்னுடன் உடலுறவு கொண்டார்,'' என்கிறார் ஸெஹரா. பின்னர், மீண்டும் அழைத்து கொள்கிறேன் என்ற பொய்யான வாக்குறுதியுடன் ஹைதராபாத்துக்கே திருப்பியனுப்பப்பட்டார் அவர்.
  மோசடி திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உதவ ஷஹீன் என்ற அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார் ஜமீலா நிஷாத்.
  மூன்றில் ஒரு பகுதி குடும்பங்களில், வெறும் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பெண் வேலை செய்யும் முஸ்லீம் சுற்றுப்புறத்திலே திருமணம் முடிக்கப்படுவதாக கூறுகிறார்.
  ''இதுபோன்ற நிறைய குடும்பங்கள் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை நம்பியே குடும்பத்திலுள்ள பிள்ளைகள் இருக்கின்றனர்.'' என்கிறார் அவர்.
  இதுபோன்ற மோசடி திருமணங்கள் பாலியல் தொழில் செய்வதற்கு சமம் என்கிரார் இஸ்லாமிய முனைவர் முஃப்தி ஹஃபீஸ் அப்ரார்.
  ''இளம் பெண்களை வெளிநாட்டிருந்து வரும் ஆண்களுக்கு திருமணம் முடிக்க பணம் வாங்கும் முஸ்லிம் மதகுருக்களால் இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர்'' என்கிறார் அவர்.
  மோசடி திருமணங்களை நிறுத்துவதற்கு மசூதிகள் மூலம் உதவிப்பெற திட்டமிட்டு வருகிறார் தெலங்கானாவின் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அதிகாரியான இம்தியாஸ் அலி கான்.

  தனது வாழ்க்கை பயணம் கடுமையானதாக இருந்தாலும், பெண்களுக்கான கல்வி உரிமை குறித்த முக்கியத்துவத்தை ஒருநாள் சமூகம் கொடுக்கும் என்பதை ஃபர்ஹீன் நம்புகிறார்.
  ''எனக்கு திருமணம் நடத்தியது பற்றி இப்போது எனது பெற்றோர் மிகுந்த வேதனையடைகின்றனர். இந்த புரிதல் பிறருக்கும் பரவினால் மற்ற பெற்றோர்களும் தங்கள் பெண் பிள்ளைகளை பணத்திற்காக திருமணம் முடிப்பதற்கு பதிலாக படிக்க வைப்பார்கள்'' என்கிறார் ஃபர்ஹீன்.

  வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர்.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad