• சற்று முன்

    மிலாது நபி விழா நிகழ்ச்சி இதில் மூன்று மதங்களின் தலைவர்களை அழைத்து மாபெரும் மத நல்லிணக்க பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது


    மிலாது நபி விழா நிகழ்ச்சி இறுதி நாளான இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது, இதில் மூன்று மதங்களின் தலைவர்களை அழைத்து மாபெரும் மத நல்லிணக்க பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது 

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காஞ்சிபுரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், மாபெரும் சமய நல்லிணக்க மிலாது நபி விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது வந்த நிலையில் நிறைவு நாளாக  



    இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட ஒலிமுகமது பேட்டை அருகே தோப்புத் தெரு பகுதியில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய மாவட்ட தலைவரான M. அப்துல் அஹத் காஷிஃபி தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

    மேலும் சிறப்பழைப்பாளர்களாக நிகழ்வை சிறப்பித்த, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் P.A. காஜா முஹைதீன் பாகவி ஹஜ்ரத் உள்ளிட்ட இந்துவில் இருந்து சாமியார் மடத்தை சேர்ந்த சுவாமி சைதன்யானந்தா மற்றும் ஏனத்தூர் பகுதியில் உள்ள தேவாலயத்தின் போதகர் சின்னப்பன் மரியாசூசை முக்கிய நிர்வாகிகள் மற்றும் சமய நல்லிணக்க ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

    அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு மிலாது நபி விழாவை சிறப்பித்து நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மரத்திலேயே சிறந்த மரம், பழத்தில் சிறந்த பழமாக விளங்கும் பேரிச்சம்பழம் போன்று இருக்கவேண்டும், ஏனென்றால் பேரிச்சம்பழம் மரம் என்பது அதன் இலைகள் கூட ஒரும்போதும் உதிராது என்று மேற்கோள்காட்டி எடுத்துரைத்து சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad