• சற்று முன்

    காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் விழா மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் R.V. ரஞ்சித் குமார் மற்றும் தென்னரசு பங்கேற்பு



    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில்,பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி விலையுடன் கூடிய  விற்பனையை தமிழகம் முழுவதும் துவக்கி உள்ளது.

    இதன் முதல் விற்பனையை, காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் இயங்கி வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில்  மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் R.V. ரஞ்சித் குமார் மற்றும் தென்னரசு ஆகியோர் ரிப்பன் கத்தரித்து குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து புதிய ரக பட்டு சேலைகளை பார்வையிட்டனர். ...இதனை தொடர்ந்து இங்கு வழங்கப்படும் 



    இந்த அதிரடி சலுகை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு 2027 ஜனவரி 31ஆம் தேதி வரை 139 நாட்கள் வரை வழங்கப்படும் எனவும்,. கடந்தாண்டை பொருத்தவரையில் 80 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், இந்த ஆண்டு 115 இலட்ச ரூபாய்க்கு விற்பனையை அதிகரிக்க  இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாகவும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சினேகா, கோ- ஆப்டெக்ஸ் நிறுவன மண்டல மேலாளர் ஸ்டாலின், கைத்தறித்துறை  துணை இயக்குனர் மணி முத்து, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி விஜயகுமார், ரக மேலாளர் பெருமாள், விற்பனை நிலைய மேலாளர் கல்பனா உள்பட அரசு அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்....


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad