• சற்று முன்

    காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரவு செய்ய வேண்டும் மனு


    காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலை உணவு திட்டம் தொடங்கிய நேரத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலாராக பணிபுரிந்த எங்களை தேர்வு செய்து பணியமர்த்தினர். தொடர்ந்து நாங்கள் வேறு எந்தப் பணிக்கும் செல்லாமல் பணிசெய்து வருகிறோம்.

    எங்களுக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உணவு பெறுதல் மற்றும் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். அதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் மாணவர்கள் சாப்பிடும் தட்டு ஆகியவற்றை நாங்களே சுத்தும் செய்தும் வருகிறோம். பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை நாங்களே வாங்கி சுத்தம் செய்து வருகிறோம்.

    எங்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்திலேயே கைபேசியில் விவரங்களை பதிவட்டும், பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கியும் செய்து வருகிறோம் இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் 20 தேதிகளுக்கு எங்களுக்கு வழங்கப்படவில்லை. மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. எங்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம்

    மேலும் ஒரு நாளும் விடுப்பு எடுக்காமல் பணி செய்து வருகிறோம். உடல் நிலை சரியில்லை என்றாலோ அல்லது அவசரத் தேவைக்கு விடுப்பு எடுக்க இயலவில்லை. பள்ளியில் உள்ள சத்துணவு பொறுப்பாளர்களும் பொறுப்பேற்க மறுத்துவிடுகிறார்கள். ஆகவே எங்களது சிரமங்களை புரிந்து கொண்டு தொடர்ந்து பணியாற்றும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மாதாந்திர மதிப்பூதியம் 5 தேதிகளுக்குள் வழங்கவேண்டும்,

    பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உரிய தொகையினை வழங்கவேண்டும், இணைய வழி பயன்பாட்டிற்கு உரிய தொகையினை வழங்க வேண்டும், அவசரத் தேவைக்கு விடுப்பெடுக்க அனுமதிக்க வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்,  மாணவர்களின் எண்ணிக்கை 100க்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்,

    தங்களை எங்களுடைய பணிவுடன் காலை உணவுத்திட்டத்தினை மேலும் சிறப்பாக செய்திட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனு அளித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad