• சற்று முன்

    தமிழ்நாடு முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் சிலம்பாட்ட சாலை பேரணி:அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

    காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக மாபெரும் சிலம்பாட்ட சாலை பேரணி காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.


     இந்த நிகழ்ச்சியில் அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் பி கே தென்னரசு, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர் வி ரஞ்சித் குமார், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் ஜே முனிரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து வைத்து இந்த மாபெரும் சிலம்பாட்ட பேரணியை துவக்கி வைத்தனர். மேலும் பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.


     மேலும் இந்த விழாவில் இந்திய சிலம்பாட்ட சம்மேளன தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் கேப்டன் பிரதீப் ஆர் ராஜே, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநில பொதுச் செயலாளர் எஸ் விஜய் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

     இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட தலைவர் வி ஹேமச்சந்திரன், செயலாளர் வி ராஜா, பொருளாளர் கே வரலட்சுமி குமரவேல், துணைச் செயலாளர் ஆர் கே ரோஷன் அபியாசாப் மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad