• சற்று முன்

    காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில் கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ கொம்மாத்தமன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.


    காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில் கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ கொம்மாத்தமன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசை



    காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ கொம்மாத்தமன், அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோயிலின்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டு,நேற்றைய தினம் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,வாஸ்து சாந்தி, தனபூஜை, முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்த் இன்று மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி,காலை கோபூஜை,இரண்டாம் கால பூஜைகள்,  பூர்ணாஹூதி, மகா தீபாராதனை மற்றும் கலச பூஜைகளைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை கோயில் விமானங்களுக்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் அருள்மிகு கொம்மாத்தமன், அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமானது வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    பின்பு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும்,மகா தீபாராதனைகளும், நடைபெற்றது. 

    வையாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நீலகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு TVK தொண்டர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார், அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி, சால்வை அணிவித்து , கலசத்துடன் கூடிய கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் வையாவூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழா முடிவினில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆலய நிர்வாகிகள், மற்றும் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்....

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad