• சற்று முன்

    கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு எதிராக கண்டன தீர்மானம்


    கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் - வாக்குவாதம் பரபரப்புக்கு இடையே த. வெ. கவிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு எதிராக கண்டன தீர்மானம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது சமீபத்தில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர். ராஜூ அதிமுகவில் இருந்து  விலகி தமிழக வெற்றிக்கழகத்திற்கு சென்ற நிலையில் முதல்முறையாக அவர் இல்லாமல் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் அவைத்தலைவர் முன்னாள் எம். எல். ஏ. என் கே பெருமாள் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் கட்சியை விட்டு சென்ற முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூவை கண்டித்து சிலர் பேசினர் இதற்கு கலை இலக்கிய பிரிவு நிர்வாகி செல்வம் என்பவர் கட்சியை விட்டு போனவரை பற்றி பேச வேண்டாம்  கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை கூற வேண்டும் என்று கூறினார்.  இதற்கு அதிமுகவின் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் அவரின் சட்டையை பிடித்து இழுத்து  வெளியே அனுப்ப முயற்சி செய்தால் பரபரப்பு ஏற்பட்டது  இதனை தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் எல்லோரையும் அமைதி படுத்தினர். அப்போது மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் பிரியா என்பவர் விளாத்திகுளம் தொகுதியில் கட்சியினர் சரியாக வேலை பார்க்கவில்லை என்றும்  மகளிர் அணிக்கு யாரும் மதிப்பு தரவில்லை என்று கூறினார். இதனால் அவருடன் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனார்.இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உள்ளே வந்து இருதரப்பையும் அமைதிப்படுத்தியது மட்டுமின்றி  மகளிர் அணி நிர்வாகி பிரியாவை போலீசார் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்

    இதனை தொடர்ந்து கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது  அதிமுக கட்சியில் இருந்து விலகி த. வெ. க. சென்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்போம் கட்சி பணியாற்றுவோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad