மாநிலம் முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள்ரத்து செய்யப்பட்ட நிலையில் வேலூரில் நடைபெற்றது
வேலூரில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வுகள் மாநிலம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையிலும் இன்று வேலூரில் தேர்வுகள் நடந்தது அதனை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல்
வேலூர்மாவட்டம்,வேலூரில் முஸ்லீம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் குரூப் -2 மற்றும் குரூப் -2 ஏ தேர்வுகள் இன்று இந்த மையத்தில் 171 பேர் தேர்வைஎழுதி வருகின்றனர்
மாநிலம் முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் முழுமையாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது இதனால் மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு சென்ற தேர்வாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
ஆனால் வேலூரில் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து தேர்வுகள் நடந்து வருகிறது இதனை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்கள் காவல்துறையினரால் மிரட்டப்பட்டனர் இருப்பினும் தேர்வு உள்ளே எழுதுபவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட தகவல் தெரியாததால் ஆர்வமுடன் அவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது காலதாமதமாக தங்களுக்கு தகவல் கிடைத்ததால் தேர்வு துவங்கி விட்டது எனவே தேர்வு முடியும் வரையில் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளோம் என தெரிவித்தனர்
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ்
குமார்






கருத்துகள் இல்லை