சென்னை வளசரவாக்கம் பகுதியில் சினிமா நடிகைகள் மூலம் போதை பொருட்கள் விற்பனை
திரைப்பட நடிகை, உதவி இயக்குநர் உள்ளிட்ட 9 பேரிடமிருந்து மெத்தபெட்டமைன், ஓஜி உயர் ரக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் சினிமா நடிகைகள் மூலம் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இந்த நிலையில் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மெத்தப்பட்ட மைன், விலை உயர்ந்த ஓ ஜி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மலையாளத் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா என்பவரை காவல் துறையினர் சோதனை செய்தனர். அவர் பயணம் செய்த சொகுசு காரில் மேலும் பலர் சினிமா துறையில் இருந்து கொண்டு, இது போன்ற போதை மாத்திரை, கஞ்சா, மெத்து உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை எடுத்து போதை பொருளை விநியோகம் செய்த விக்னேஸ்வரன், மலையாள நடிகை அஞ்சு கிருஷ்ணா, புலித்தே எட்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டனர். பின்னர் ஒன்பது பேருக்கும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






கருத்துகள் இல்லை