கோவில்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் எஸ்ஐஆர் என்று அழைக்கப்படும் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பணிக்கு பின்னர் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி,ஏவி மேல்நிலைப்பள்ளி, இலுப்பையூரணி அரசு பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் வாக்காளர் பட்டியல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இடைசெவல் நடுநிலைப் பள்ளி, லாயல் மில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாடார் மேல்நிலைப் பள்ளி, ஏவி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டார். ஏவி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமின் போது கலெக்டர் இளம்பகவத்,முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேருக்குநேர் சந்தித்து சிறப்பு முகாம்கள் செயல்பாடு குறித்து பேசினர்.
எஸ்ஐஆர் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரி மாற்றம் என 10.09 சதவீதம் அதாவது ஒரு லட்சத்தி 61 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். நீக்கம் செய்யப்பட்டவர்களில் தகுதி உள்ளவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம் கடந்த வாரம் சனி, ஞாயிறு நடைபெற்றது. இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது.கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 16,312 பேர் வாக்காளர் பட்டியலில் சேர சேர்க்கை விண்ணப்பம் செய்துள்ளனர் 161 பேர் பல்வேறு காரணங்களுக்காக நீக்குதல் படிவம் கொடுத்துள்ளனர். டிவம் 8 என்று சொல்லக்கூடிய சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்காக 6700 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 23,000 படிவங்கள் கடந்த வாரம் பெறப்பட்டுள்ளன. இந்த முகாமில் கொடுக்கப்படக்கூடிய விண்ணப்பங்களில் தெரிவித்துள்ள தகவல்களை சரி பார்த்து சரியாக உள்ள விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்றார். ஆய்வின் போது தாசில்தார் பாலசுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ,அழகர்சாமி,அன்புராஜ், நகர இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மற்றும் விஜயன், வெற்றிசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை