• சற்று முன்

    ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு


    ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு கட்சி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒன்றிய செயலாளர். வி.எஸ்.ஞானவேலன்

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் தனியார் மண்டபத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். 


    இதில் கிளை கழக செயலாளர்கள், கிளை கழக பிரதிநிதிகள், BLA2 நிர்வாகிகள் BDA நிர்வாகிகள்  BLC நிர்வாகிகள்  ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் என 520 நபர்களுக்கு பட்டு புடவை,பட்டு வேஷ்டி,சட்டை, கலண்டர், கழக சால்வை மற்றும் பொங்கல் சிறப்பு பரிசு ரொக்கம் 4000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்புக்கள், கிளை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


    முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஞானசேகரன் நன்றியுரை கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad