• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆட்சியர் அலுவகம் வெளியே காத்திருப்பு போராட்டம்


    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பா .சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் கீதா வரவேற்புரை ஆற்றினார்.

    மேற்படி காத்திருப்பு போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நவீன மயமாக்கப்பட்ட கழிப்பிட வசதி கூடிய அலுவலக கட்டிடம் கட்டி தர கோருதல் கிராம நிர்வாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக மாற்றி அமைக்க கோருதல் பதவி உயர்வு பத்தாண்டு முடிந்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும், 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் அரசாணை வெளியிட கோருதல் கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில் 30 சதவீதம் என்பதிலிருந்து 50 சதவீதமாக மாற்றக் கோருதல்

    கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலையில் ஊதியமும் சிறப்புகளை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க கோருதல் TSLR பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை பெற வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோருதல் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோருதல்  உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சங்கரநாராயணன், அரக்கோணம் கோட்ட செயலாளர் நெடுஞ்செழியன், அரக்கோணம் , நெமிலி ,சோளிங்கர் ஆற்காடு ,கலவை வாலாஜா ஆகிய வட்ட தலைவர்கள் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சுமார் 180 நபர்கள் கலந்து கொண்டனர் 

    மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad