• சற்று முன்

    சமூக நீதிப் போர்வாள் தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாள்: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி!

     


    பகுத்தறிவுப் பகலவன், மாபெரும் சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று எழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. டி. திருச்செல்வம் தலைமையில்  மண்டலத் தலைவர்கள் மாமரத்து பாளையம் எஸ். கோபி, ஆர். விஜயபாஸ்கர், ஹெச். எம். ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணைத் தலைவர் திரு. பா. ராஜேஷ் ராஜப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்வில் பங்கேற்ற  முக்கிய நிர்வாகிகள்: துணைத் தலைவர் கே. புனிதன், *பொதுச் செயலாளர்கள்: டி. கண்ணப்பன், ஏ.சி. சாகுல் அமித், கராத்தே யூசுப், இரா. கனகராஜன், எ. வின்சென்ட், எ. அன்பழகன், ராஜாஜி புரம் சிவா.

     * மாநில நிர்வாகிகள்: தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில முதன்மைத் துணைத் தலைவர் எம். ஜவஹர் அலி, தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (TCTU) மாநிலத் துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி.எம். ராஜேந்திரன்.

    மாவட்டப் பிரிவு தலைவர்கள்: ஊடக பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், சிறுபான்மை துறை துணை தலைவர் கே.என். பாஷா, NCWC மாவட்டத் தலைவி ஆர். கிருஷ்ணவேணி, OBC பிரிவு மாவட்டத் தலைவர் சூர்யா சித்திக். பிற நிர்வாகிகள்: முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, மாவட்ட நிர்வாகிகள் வேன் ராமசாமி, நூர்தீன், பிரபு உள்ளிட்டோர் தந்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி மற்றும் சமத்துவத்தைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad