• சற்று முன்

    லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மற்றும் பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய தென் மாநில அளவிலான லத்தி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்


    கோவில்பட்டியில் தென் மாநில லத்தி ஸ்போர்ட்ஸ்: மகாராஷ்டிரா மாநில அணியினர் முதலிடம் – தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார்.


    லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மற்றும் பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய தென் மாநில அளவிலான லத்தி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  2 நாட்கள் நடைபெற்றது.இதில், புதுச்சேரி, தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். 8 வயது முதல் 12 வயது, 12-18, 18-25 மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மகாராஷ்டிரா மாநில அணியினர் தட்டிச் சென்றனர். புதுச்சேரி அணியினர் 2 ஆம் இடத்தையும், தமிழ்நாடு அணியினர் 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 


    லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்  கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.இதில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, கட்சி அதிமுக நிர்வாகிகள் கோபி, பழனிகுமார், முருகன், தமிழ் கல்ச்சுரல் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகு துரை, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் பொருளாளர் கரிகாலன், தொழிலதிபர் பெனட், உட்பட பலர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad