திமுகவுக்கு உளவு வேலை பார்த்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!
வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் எஸ். ஆர். ராஜசேகர். இவர் அதிமுக ஐடி விங் வேலூர் மண்டல துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் காட்பாடியில் உள்ள திமுக பிரமுகர்களுடன் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி விவகாரங்களை திமுகவினருக்கு அவ்வப்போது தகவல் அளித்து வந்ததாக அதிமுக தலைமைக்கு புகார்கள் சென்றது. இந்நிலையில் திமுகவிற்கு உளவு வேலை பார்த்து வந்த அதிமுக பிரமுகர் ராஜசேகரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் வகித்த பதவியில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் காட்பாடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை