• சற்று முன்

    செய்யாறில் எம்.ஜி.ஆரி., நினைவு தினம் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை !


    செய்யாறில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை ஒட்டி அ.தி.மு.க.,வினர், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    செய்யார் அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய ஒன்றிய செயலாளர் பையா குட்டி ( எ ) திருமூலன் தலைமையில், தூசி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் இந்தப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நமண்டி பாலன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சுதர்சனன், பல்லாவரம் நாகப்பன், பிரதீஷ், ராஜ், சத்தியசீலன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    இதே போல் செய்யாறில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர் துரை, பாராசூர் பெருமாள், ஆலத்தூர் சுப்புராயன், கொடநகர் அருண் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad