வேலூர் நேதாஜி மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா
வேலூர் மாவட்டம், வேலூர் நேதாஜி மைதானத்தில், நேற்று (15.08.2025) நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளர், செய்தித்துறை பி.ஆர்.ஓ. அலுவலக உதவியாளர் தரணிக்கு, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வாழ்த்துக்கள் தெரிவித்து, பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட அளவிலான அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தேசபக்தி மிகு. முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை