வாலாஜா தென் கடப்பந்தங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் வீசும் துர்நாற்றம்.
ராணிப்பேட்டை மாவட்டம் தென் கடப்பந்தங்கள் உட்பட்ட பகுதியில் அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கல்லூரி இயங்கி வருகின்றன இந்த கல்லூரியில் காலை முதல் மதியம் வரை மதியம் முதல் மாலை வரை சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர் இது மட்டுமல்லாமல் கல்லூரி அருகே எட குப்பம் செல்லும் சாலையில் கல்லூரியில் படிக்கும் பெண்கள் விடுதி அமைந்துள்ளது இதில் சுமார் நானூருக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர் எடகுப்பம் செல்லும் சாலையில் வாலாஜாவில் இயங்கி வரும் சிக்கன் கடைகளில் இருந்து சிக்கன் கழிவுகள் மற்றும் அழுகிப்போன பழ வகைகள் சாலையில் தினந்தோறும் கொட்டப்பட்டு வருகின்றனர் இது மட்டுமல்லாமல் அப்பகுதியில் பல வருடங்களாக குளம் போல் தேங்கி கிடக்கும் தண்ணீர் அகற்றாமல் உள்ளனர் இதனால் அப்பகுதியில் பல வருடங்களாக துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் அப்பகுதி வழியாக செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது இதன் சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தென் கடப்பந்தாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா அவர்களிடம் தகவல் தெரிவித்தும் இதனால் வரைக்கும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்...
கருத்துகள் இல்லை