முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6வது நினைவு திமுகவினர் நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாநகரில் அமைதி பேரணி.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6வது நினைவு நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாநகரில் 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி.
தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்தவர் மு.கருணாநிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மறைந்த கலைஞரின் 6வது நினைவு நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அமைதி பேரணியும், நலத்திட்ட உதவிகளும் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் தலைமையில் காந்தி சாலையில் உள்ள பெரியார் நினைவுத்தூன் பகுதியில் இருந்து துவங்கி தேரடி, ரங்கசாமிகுளம் வழியாக கலைஞர் பவள விழா மாளிகையில் நிறைவடைந்து, பிறகு அண்ணா மற்றும் கலைஞனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி பின் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உடன் சுமார் 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை