• சற்று முன்

    தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 23 கல்லூரிகளுக்கு 14.70 லட்சம் மதிப்பிலான போட்டித்தேர்வு நூல்களை வழங்கிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.



    தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23 கல்லூரிகளுக்கு 14.70 லட்சம் மதிப்பிலான போட்டித்தேர்வு நூல்களை வழங்கிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்



    மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரை தொகுதிக்கு உட்பட்ட 23 கல்லூரிகளுக்கு போட்டி தேர்வு எழுதுகிற மாணவர்களுக்காக கருவி நூல்கள் 191 நூற்களும், அதனை  வைப்பதற்கான புத்தக அடுக்குகளும் வழங்கும் விழா மேலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

    மதுரைத் தொகுதிக்குட்பட்ட 23 கல்லூரிகளுக்கி சுமார் 5730 நூல்களை வழங்கி விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம் பி விழா சிறப்புரையாற்றினார். போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக… அது குடிமைப் பணி தேர்வாக இருக்கலாம், வங்கியியல் தேர்வாக இருக்கலாம், ரயில்வே வாரிய தேர்வாக இருக்கலாம் அவர்கள் எந்த தேர்வுகள் எழுதினாலும் அந்த தேர்வுகளுக்கான கருவி நூல்கள் கிடைப்பது மிக கடினம். தனியார் பயிற்சி மையங்களில் இருக்கும் வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வழிகாட்டுனர் பலரின் ஆலோசனையை பெற்று 191 நூற்களின் பட்டியலை இறுதி செய்தோம்.

    கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு முயற்சி எடுத்து நம்முடைய மாவட்டத்தில் இருக்கிற அனைத்து நூலகங்களுக்கும் போட்டி தேர்வு எழுதுற மாணவர்களுக்கான கருவி நூல்களை கொடுத்தோம். மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக அவற்றை துவக்கி வைத்தார். இந்த ஆண்டு அவற்றிலிருந்து ஒரு படி அதிகமாக  கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்த திட்டத்தினை மேலூர் அரசு கல்லூரியில் துவக்கியதை பெருமையாக நினைக்கிறேன்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக போட்டித்தேர்விற்கு தயாராகிற மாணவர்களுக்கு என்று ஒரு பூங்காவை மதுரையிலே ஓராண்டுக்கு முன்பு துவைக்கணும் தினசரி 500 லிருந்து 600 மாணவர்கள் அந்த பூங்காவில் படிக்கிறார்கள். பூங்காவில் படிக்கிற மாணவர்களுக்கு காலை 11 மணிக்கு தேநீரும் மாலை 4 மணிக்கு மோருடன் கூடிய சிற்றுண்டியும் பல நண்பர்கள் தாங்களாக முன்வந்து இலவசமாக வழங்குகிறார்கள்.

    சிசிடிவி கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இருக்கிறது. அதனுடைய விளைவு என்னவென்றால் பூங்காக்களில் உட்கார்ந்து தேர்விற்கு படிக்கிற மாணவிகளுடைய பெற்றோர்கள் சார் வெளி பூங்காக்களில் படிக்கிற பிள்ளைங்க எல்லாம் வந்து ஆறு மணிக்கு மேல அங்க இருக்க கூடாது வாங்கன்னு சொல்லிடுவோம். ஆனால் இந்த பூங்கா அனைத்து பாதுகாப்பு வசதிகளோடு இருப்பதால் இரவு பத்து மணி வரை கூட எங்கள் வீட்டுப்பிள்ளைகள் படித்துவிட்டு வருவதை நாங்கள் அனுமதிக்கிறோம். அதனுடைய விளைவு நீங்க பார்த்தீர்கள் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்நாட்டில் பெண்கள் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியாக நமது படிப்பக வளாக பூங்காவிலே படித்த மாணவி தேர்வாகி இருக்கிறார். இன்றைக்கு விருதுநகரிலும் அதேபோன்று பூங்காவை சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் அதே போன்று ஒரு பூங்கா அடுத்த சில நாட்களில் சில வாரங்களில் துவக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு முன்னுதாரணமான பூங்காவை போட்டித் தேர்விற்கு படிப்பதற்கான பூங்காவை மதுரையில் துவக்கி இருக்கிறோம். விரைவில் அதேபோன்று ஒரு திட்டத்தை மேலூரிலும் அமல்படுத்த இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

    நிகழ்வில் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், துணை தலைவர் இளஞ்செழியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கமலூதீன், சைபு நிஷா அலாவுதீன், ரிம்யாசெந்தில், சர்மிளா ஜாகீர்உசேன், நல்லம்மாள் விஜயபாண்டி, நகர் மாவட்ட பிரதிநிதி முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், 

    மற்றும் துணைமுதல்வர் கணேஷ்வரி, பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்...

    செய்தியாளர் வி காளமேகம்
















































































































































































    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad