Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் ரயில்வே கடவுபாதைகளுக்கு ரயில்வே மேம்பாலங்களை 48 அமைத்து வருகிறோம் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலு


    வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள சுற்றுலா மளிகை புதியதாக ரூ..7.  63 கோடி மதீப்பீட்டில் கட்டப்பட்டது இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் உடன் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ.வேலு மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மற்றும் மேயர் சுஜாதா சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர் இதன் பின்னர் பாலாற்றின் குறுக்கே சத்துவாச்சாரி -காங்கேயநல்லூர் மேம்பாலம் ரூ.96 மதீப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவிலும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஏ,வ.,வேலு கலந்துகொண்டனர் இவ்விழாவில் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.



    முன்னதாக சுற்றுலா மாளிகை திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில்  சுற்றுலா மாளிகை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது லிப்ட் வசதிகள் திராவிட மாடல் ஆட்சியில் 18 மாதம் ஒப்பந்தம் போட்டாலும் தரமாக விரைவாக பணிகள் முடிகிறது 9 மாதங்களிலேயே இந்த சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது 100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை புணரமைத்து பயன்பாடிற்கு கொண்டு வருகிறோம் முதல்வர் கடந்த ஆண்டு அதற்காக ரூ.100 கோடியை ஒதுக்கினார் அதை போல் சுற்றுலா மாளிகையும் புதுப்பிக்கபடும் விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலத்திற்காக ஒன்றிய அரசின் நிதியை எதிர்பார்த்துள்ளோம் அது வந்தவுடன் பணிகள் துவங்கப்படும் காட்பாடி மேம்பாலம் இரண்டு முறை ஒப்பந்தம் கோரப்பட்டும் யாரும் ஒப்பந்தம் போடவில்லை மீண்டும் அதற்காக ஒப்பந்தம் போடப்படும் சி.எம்.சி சுரங்கபாதை அமைக்க ஆய்வு செய்தோம் ஆனால் சி.எம்.சி மருத்துவமனை இடம் தர மறுத்ததால் அங்கு அரசு இடம் இருப்பதாக அறிகிறேன் அங்கு அளவீடு செய்து அரசு இடம் இருந்தால் சுரங்கபாதை அமைக்கப்படும் கோவை மதுரை போன்ற நெரிசல் மிகுந்த இடங்களில் பாலம் அமைத்துள்ளோம் ஆனால் வேலூரில் வியாபார ஸ்தலங்கள் அதிகம் அப்படி கட்ட வேண்டுமானால் பெரிய பெரிய கட்டிடங்களை இடிக்க நேரிடும் அரசின் மீது வெறுப்புணர்வு வர வாய்ப்புள்ளது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தொல்லை இல்லாமல் பாலம் அமைக்க சாத்தியகூறு இருந்தால் மேம்பாலம் அமைக்கபடும் 48 க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைத்து வருகிறோம் என கூறினார் 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad