அரசு பேருந்துகளில் டிக்கெட் வழங்க புதிய இயந்திரம் அறிமுகம்
அரசு பேருந்துகளில் தற்போதுள்ள டிக்கெட் வழங்கும் மிஷின்களுக்கு பதிலாக புதிய தொடுதிரை வசதி கொண்ட டிக்கெட் வழங்கும் இயந்திரம் அறிமுகமாக உள்ளது. அரசு பேருந்துகளில் தற்போதுள்ள டிக்கெட் வழங்கும் மிஷின்களுக்கு மாற்றாக புதிய தொடுதிரை வசதி கொண்ட டிக்கெட் வழங்கும் மிஷன் அறிமுகபடுத்தவுள்ளது.ஆவடி, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக 160 பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது.
அண்மையில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆவடியில் இருந்து தொலைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் , தென்மாவட்டங்கள்,மத்திய மேற்கு மாவட்டங்களுக்கு தினமும் 160 பேருந்துகளை மாதவரத்தில் இருந்து இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
ஆவடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது கோயம்பேடுக்கு மாற்றாக கிளாம்பாக்கத்தில் இருந்து பொதுமக்கள் பேருந்துகளை பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவுப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

.jpg)






கருத்துகள் இல்லை