• சற்று முன்

    திருப்பத்தூர் அடுத்த தாயப்பான் நகர் பகுதியில் போட்டோகிராபர் வீட்டில் 45சவரன் தங்கநகை மற்றும் 9.50லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை-கந்திலி போலீசார் விசாரணை

    திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தாயப்பன் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் போட்டோகிராபர் இவர் திருப்பத்தூரில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இன்று வீட்டிலிருந்து சுரேஷ் அவரது மனைவி ரம்யா ஆகியோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கடைக்கு சென்றுவிட்டனர்.‌


    பின்னர் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 45 சவரன் தங்க நகை மற்றும் 9.50லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சுரேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.‌

    விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கந்திலி காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் என 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு‌ சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி‌ பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்  : வெங்கட் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad