Header Ads

  • சற்று முன்

    நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புக்குட்டை பகுதியில் தனியார் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்


    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, மல்லப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்புக்குட்டை கிராமத்தில் அருகில் காப்புக்காடு உள்ளது. இதை ஒட்டி தோல்கேட் முத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 



    இந்த பகுதியில் 500 குடும்பங்கள்‌ வசித்து வருகின்றனர்.  ஏற்கெனவே அதே பகுதியில் கல்குவாரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு அது சுமார் 200 அடி ஆழம் வரை கல் வெட்டி எடுக்கப்பட்டது.   அதில் 100 அடி வரை மழை நீர் தேங்கி உள்ளது. இந்த நீரில் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். அதுமட்டுமல்லாமல் அருகே உள்ள வீடுகளும் விரிசல் ஏற்பட்டது. கல்குவாரியால் அருகே உள்ள நிலங்களும் பயிர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது.  அருகே உள்ள மலையின் மீது பிரசித்திபெற்ற பெருமாள் கோயில் உள்ளது. அந்த கோயிலும் பாதிக்கப்படும் என்று ஆதங்கம் தெரிவித்தனர். 

    ஊராட்சி நிர்வாகம், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதனால் தான் இன்று போராட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தனர். அதனால் பெரும் பாதிப்பு  ஏற்படுத்துகிற கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கோரிக்கை வைத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில் 100 கற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அனுமதி அளித்தால் தாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.


    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் : வெங்கட் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad