ராணிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர்கொலை வருவாய்த்துறை மற்றும் காவல் துறை முன்னிலையில் சடலம் தோண்டி எடுப்பு....
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (28) இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி முதல் இளவரசனை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவேரிப்பாக்கம் போலீசார் இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் சுருதி உத்தரவின் பேரில் மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்கிற லாலு (27) பூவரசன் (24) வாசுதேவன் (27) அருண்குமார் (33) ஆகியோரை பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன இளவரசன் மற்றும் பிடிபட்டவர்களுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அடுத்து வரும் மைலர் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதும். இது தொடர்பாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 6ஆம் தேதி மாலை அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அரிச்சந்திரன் சிலை அருகே லோகேஷ் ,பூவரசன், வாசுதேவன், அருண்குமார் ஆகியோர் மது அருந்து கொண்டிருந்தபோது ,அவ்வழியாக வந்த இளவரசனை வம்பு இழுத்து கையில் வைத்திருந்த கத்தி,பீர் பாட்டிலால் சரமாரியக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளவரசனை இருசக்கர வாகனத்தில் திருப்பாற்கடல் பாலாற்றுக்கு அழைத்து வந்து அங்கே கொலை செய்து தன் கையால் நால்வரும் பள்ளம் தோண்டி ஆற்றிலேயே புதைத்தது தெரியவந்தது.
இதனை அடுத்து இவர்கள் நால்வரையும் கைது செய்த காவேரிப்பாக்கம் போலீசார் கொலை செய்தவர்கள்உதவியுடன் இளவரசன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து வருவாய்த்துறை முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்தனர். அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை தலைமை மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கைதானவர்கள் வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு, பின் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர் மற்றும் கொலையாளி ஆகியோர் ஒரே கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அத்திப்பட்டு கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பதட்டத்தை தணிக்க ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை பீர் பாட்டினால் அடித்து கொலை செய்து பாலாற்றில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்யை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை