Header Ads

  • சற்று முன்

    ஆற்றில் செல்ல வேண்டிய நீர் சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் சிரமம்


    ஆகாய தாமரையால் மூழ்கிய வைகை ஆறு -  மழை நீர் ஆற்றில் செல்ல முடியாததால் வெளியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்பதால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் - வெள்ளம் வருவதற்கு முன்பு அகற்றப்படுமாக ஆகாயதாமரை? வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக கனமழை பெய்துவருகிறது 


    இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய மழை நீர் மற்றும் வைகைக் கரையோரங்களில் இருக்கக்கூடிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் வைகை ஆற்றில் தற்பொழுது வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வைகையாற்று பகுதிகளான ஆரப்பாளையம் மற்றும் யானைக்கல் பகுதிகளில் ஆகாயதாமரை செடிகள் முழுமையாக ஆற்றையே மூழ்கடிக்கும் அளவிற்கு வளர்ந்து பரவி காணப்படுகிறது.

    இதனால் ஆற்றில் உள்ள மழைநீர் செல்ல முடியாத நிலையில் ஆற்றின் ஓரப்பகுதியான யானைக்கல் தரைப்பாலம் மற்றும் ஆழ்வாரபுரம் தரைப்பாலம் பகுதி  முழுவதுமாக மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் மாணவ மாணவிகளும் பாலத்தின் கீழ் நடந்து சென்று வருவதால் அந்தப் பகுதி முழுவதிலும் தேங்கிய மழைநீரில் நனைந்தபடி செல்லும் நிலை உருவாகியுள்ளது.  இதனால் யானைக்கல் தரைப்பால பகுதியில் வைகையாற்று கரையோரங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலாவது. மாநகராட்சியோ? பொதுப்பணித்துறையோ? ஆகாய தாமரைகளை அகற்றி வரும் நீரை சரியாக பயன்படுத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad