• சற்று முன்

    கோவில்பட்டியில் முதலாவது ஹாக்கி இந்தியா சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஆண்கள் அகாடெமி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் தொடக்கம்


    இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் மண்டலம் பி-க்கான முதலாவது ஹாக்கி இந்தியா சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஆண்கள்  அகாடெமி சாம்பியன்ஷிப் 2023 ஹாக்கிப் போட்டிகள் இன்று முதல் 30ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சப்-ஜூனியர், போட்டியில் 9 அணிகளும், ஜூனியர் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றுள்ளன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலில் லீக் போட்டிகளும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன. அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. பத்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டங்களில் சப் ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகடமி,செய்ல் ஹாக்கி அகாடமி அணிகள் வெற்றி பெற்றன.

    ஜூனியர் பிரிவில்  நடைபெற்ற போட்டியில்  ராய்ப்பூர் ஸ்மார்ட் ஹாக்கி அகாடமி ,ஒடிசா நெவல் டாடா ஹாக்கி  ஹை பெர்ஃபார்மன்ஸ் சென்டர் அணிகள் வெற்றி பெற்றன. அமராவதி, பேரர் ஹாக்கி அகாடமி (விதர்பா)  அணியும், எஸ்டிடி ஹாக்கி நீலகிரி அகாடமி அணியும்  மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு  சமநிலைப் பெற்றன.இதே போன்று  ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும்,  அஸ்வினி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் போட்டு  சமநிலைப் பெற்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad