Header Ads

  • சற்று முன்

    "ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலை துறையின் திட்ட செயல்பாடுகளை நேரில் கள ஆய்வு !!!


    ராணிபேட்டை மாவட்டம் கிராம்பாடி ஊராட்சியில் ஆர்.ஆர். பார்ம் என்ற விவசாயின் நிலத்தில் விவசாயி திரு. கிறிஸ்டிமா தீஸ்மன் அவர்கள் தேசிய தோட்டக்கலை இயக்கத் மூலம் தோட்டக்கலைத் துறையின் சார்பாக ரூ.21.56 இலட்சம் அரசு மானியத்தில் 5000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் (polyhouse) அமைத்து வெள்ளரிப்பிஞ்சி செடி நடவு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்கள். 50 சதவீத அரசு மானியம் ரூ.21.56 இலட்சமும் தன்னுடைய 50 சதவீத முதலீடு என இந்த பசுமை குடில் அமைத்துள்ளேன். இந்த பசுமை குடில் மூலம்  வெள்ளரிப்பிஞ்சு நடவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் யாரும் செய்யாத முறையில் நவீன வேளாண்

    யுத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் நாட்டின் பின்பற்றப்படும் சொட்டு நீர் பாசன நடவு முறையிலும் நெதர்லாந்து நாட்டின் வெள்ளரிப்பிஞ்சு விதைகளைக் கொண்டும் இங்கு வெள்ளரிப்பிஞ்சி செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 45 நாட்களுக்குள் வெள்ளரிப்பிஞ்சிகள் அறுவடைக்கு வந்து விடும். இது வருடம் முழுவதும் தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் அறுவடை 240 கிலோவாகவும் அடுத்த அடுத்த அறுவடைகள் 700 கிலோ வரையிலும் கிடைக்கும். நெதர்லாந்தில் இருந்து பெறப்படும் விதை ஒரு விதை

    எட்டு ரூபாய் 50 பைசாவிற்கு வாங்கப்படுகிறது இங்கு விளைவிக்கப்படும் வெள்ளரிப்பிஞ்சிகளை கோவை பழமுதிர்சோலை நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளரிப்பிஞ்சி 55 ரூபாய்க்கு விற்கின்றேன் ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 10,000 வெள்ளரிப்பிஞ்சி

    செடிகள் நடவு செய்யப்படும் ஒரு செடி அதிகபட்சமாக 5 கிலோ வரையில் வெள்ளரிப்பிஞ்சிகளை கொடுக்கின்றன இதில் லாபகரமான தொழில் பசுமை குடில் மூலம் சாதகமான வெப்பநிலையை ஏற்படுத்தி தொடர் கண்காணிப்பில் பூச்சிகள் நோய்கள் தாக்காமல் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு செடிகள்

    பாதுகாக்கப்பட்டு விளைவிக்கப்படுகின்றன. இங்கு 45 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். நான் ஏற்கனவே பசுமை குடில் மூலம் குடை மிளகாய் உற்பத்தி செய்துள்ளோம் தற்பொழுது வெள்ளரிப்பிஞ்சி காய்களை உற்பத்தி செய்கின்றேன். இதை வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு இருப்பதால் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றோம் விவசாயி தெரிவித்தார். மேலும் விவசாயி வேளாண் பொறியியல் துறை மூலம் ஐந்து எச்.பி சோலார் பம்ப் செட் அரசு மானியம் ரூ.2 இலட்சத்து 91 ஆயிரம் 90 சதவீத மானியத்தில் அமைத்து சொட்டு நீர் பாசனத்திற்கான மின் மோட்டாரை இயக்கி வருகின்றார்

    அந்த கட்டமைப்பினையும். மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு கேட்டறிந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதன் முதலாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த நவீன வெளிநாட்டு யுத்திகளை பயன்படுத்தி தோட்டக்கலைத் துறையின் மூலம் பசுமை குடில் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து

    வருவதற்கு பாராட்டுதல்களை தெரிவித்தார்கள்.  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சவளர்மதி.இ.ஆ.ப. அவர்கள் இன்று ஆற்காடு ஒன்றியம் கீராம்பாடி ஊராட்சியில் கிறிஸ்டமாதீஸ்மன் என்ற விவசாயின் ஆர்.ஆர்.பார்ம் தோட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் 50 சதவிகித மானியம் ரூ.21.56 இலட்சம் மதிப்பீல் பசுமை குடில் அமைத்து வெள்ளரிப்பிஞ்சி செடி வளர்ப்பு செய்வதை பார்வையிட்டு கேட்டறிந்தார்கள். உடன் இணை இயக்குநர் வேளாண்மை (பொ) செல்வராஜீ, துணை இயக்குநர் தோட்டக்கலை உஷாமகேஷ் வேளாண்மை நேர்முக உதவியாளர் தபேந்திரன், உதவி இயக்குநர் தோட்டக்கலைத்துறை வேலு மற்றும் பலர் உள்ளனர் 

    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad