• சற்று முன்

    எட்டு மாதத்தில் 9614 போதை பொருள் குற்றவாளி கைது மற்றும் 17 ஆயிரத்து 330 கிலோ கஞ்சா பறிமுதல்


    போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 12 9 2023 முதல் 28 9 23 வரை மாநிலம் முழுவதும் 8 பெண்கள் உட்பட 223 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 386 கிலோ கஞ்சா 85 கிராம் மெத்தபிடமின் 690 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நடப்பு ஆண்டில் ஆகஸ்டு வரை மாநிலம் முழுவதும் 6824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 வெளிமாநில குற்றவாளிகள் உட்பட மொத்தம்  9634 போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 330 கிலோ கஞ்சா 726 கிராம் ஹெராயின் 24 ஆயிரத்து 511 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் 20034 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஐந்து முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 137 குற்றவாளிகள் தடுப்பு காவல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

    சட்டவிரோதமாக போதை விற்பனை மற்றும் கருத்தில் ஈடுபடு நபர்கள் பற்றிய தகவலை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும் 94 984 10 58.1 என்ற whatsapp குழு தகவல் மூலமாகவும் புகைப்படம் மூலமாகவும் மற்றும்  spnibicid@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

     மேலும் அனைத்து மாவட்டத்திற்கும் பிரச்சயோக வாட்ஸப் எண் வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் போதை பொருள் விற்பனை மற்றும் மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை பொதுமக்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad