மதுரையில் பாரத ஸ்டேட் பாங்க் - ல் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து; துரிதமாக செய்யப்பட்டு தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்*
மதுரையில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திடீர்நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசார் முருகன் மற்றும் மாசானம் ஆகியோர் மதுரை மேல வெளி வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் முதல் தளத்தில் கரும்புகைகள் உடன் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு முருகன் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வாகனங்களில் செந்தில்குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் வங்கியில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடி விரைந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து குறித்து மதுரை திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சேதமான பொருட்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை