கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறை கடலோர பாதுகாப்பு குழுமம் சென்னை மெரினா கடற்கரை முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டிருக்கும் 42 கடற்காவல் நிலையங்களில் மொத்தம் 1076 கிலோமீட்டர் தூரம் கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறை துறையின் கடலோர பாதுகாப்பு குழுவை சேர்ந்த சுமார் 450 காவலர்கள் தேசிய மாணவர் படை கடல் சார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், கல்லுரி மாணவர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கடலோர தூய்மை பணியை மேற்கொண்டனர்.
கடலோர பாதுகாப்பு குழுவின் கூடுதல் இயக்குனர் ஜெனரல், கடலோர பாதுகாப்பு குழுவின் டாக்டர் சந்தீப் மிட்டல், IPS வழிகாட்டுதலின் படி நம் கடற்கரையை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து பொது மக்களை கடல் சுற்றுசூழலை பாதுகாப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை