விருதுநகரில், 10 மாத குழந்தை உலக சாதனை... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
விருதுநகர், சுலோச்சனா தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவரது மனைவி குருசரண்யா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகன், அதிர்த்திபனுக்கு சாதனையாளர் விருது வழங்கியது. இந்த தகவலை அறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசப்பெருமாள், சாதனை படைத்தபன் பார்த்தசாரதி 10 மாத குழந்தையாக உள்ளார். இந்த 10 மாத குழந்தை உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். எப்போதும் துறுதுறுப்பாக இருக்கும் அதிபன் பார்த்திபன், கடந்த 7ம் தேதி 2 மாடி கட்டிடத்தில் உள்ள 34 படிகளை 4 நிமிடம், 20 விநாடிகளில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அங்கீகரித்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம், 10 மாத குழந்தை அதிபன் பா குழந்தை அதிபன் பார்த்திபன், அவரது பெற்றோர்கள் மகேஸ்வரன், குருசரண்யா ஆகியோரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து வாழ்த்துகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 'விளையும் பயிர் முளையிலேயே' என்ற முதுமொழிக்கேற்ப குழந்தை அதிபன் பார்த்திபன், வருங்காலங்களில் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசப்பெருமாள் வாழ்த்து தெரிவித்து கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை