மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் தனியார் JCPஇயந்திரத்தைக் கொண்டு பாதை அமைக்கும் பணி செய்து வருவதால் அருகில் உள்ள வீடு இடிந்து விழும் அபாயம் ..
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆழ்துளை இயந்திரம்.ஜேசிபி. ஹிட்டாச்சி. கம்ப்ரஸர். போன்ற கனரக வாகனங்கள் இயக்க தடை உள்ள நிலையில் வருவாய்த்துறை.வனத்துறை கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் இயந்திர உரிமையாளரிடம் பல்லாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆதரவுக் கரம் நீட்டுவதால் தற்போது அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மற்றும் கொடைக்கானல் ஒன்றிய பகுதிகள் உள்ளது வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த செந்தில் வில்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி ஆகியோர் போர்வெல் மற்றும் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களையும் பயன்படுத்தி மலையை அழித்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கருத்துகள் இல்லை