ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் உயிரிழப்பு! கை குழந்தையுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் கதறல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமிகண்ணு மனைவி கோமதி (25) இவர்களுக்கு திருமணம் ஆகி வருன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தையும், தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்கணம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய மருத்துவர்கள் ஆலோசனை செய்ததால் அங்கிருந்து ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோமதியை மாற்றப்பட்டு மருத்துவர் மனோன்மணி குடும்ப கட்டுப்பாடு செய்தனர் இந்த நிலையில் நன்றாக இருந்த கோமதி திடீரென உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்ற காலகட்டத்தில் அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான முறையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கோமதின் உறவினர்கள் கத்தி கதறினர்
கருத்துகள் இல்லை