நிலக்கோட்டையில் நூற்றாண்டு பழமையான,அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று,இந்த நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற அருள்மிகு கமலவல்லி தாயார் சமேத, ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்த பணிகளான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உபயதாரரான தொழிலதிபரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கரிகாலபாண்டியன் தலைமை வகித்தார்,நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,செயல் அலுவலர் பாலசரவணன்,தக்கார் பிரவீன்குமார் முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்,தலைமை நிலைய எழுத்த ராஜகோபால் வரவேற்றார்,நிகழ்ச்சியில் சிவாச்சாரர்களால் யாகம் வளர்க்கப்பட்டு,வேதம் ஓதப்பட்டு அபிஷேக ஆராதனைகள்,சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பாலாலயம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது, மேலும் இந்நிகழ்ச்சிக்கு திமுக நகரச்செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளிமலை,நெடுமாறன்,பேரூராட்சித் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன்,ஜமீன் விஜயராஜன் மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள் பொன்மணி,ஷர்மிளா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்,முடிவில் அறநிலையத்துறை அலுவலக பணியாளர் அருண்குமார் நன்றி கூறினார்…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று,இந்த நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற அருள்மிகு கமலவல்லி தாயார் சமேத, ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்த பணிகளான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உபயதாரரான தொழிலதிபரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கரிகாலபாண்டியன் தலைமை வகித்தார்,நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,செயல் அலுவலர் பாலசரவணன்,தக்கார் பிரவீன்குமார் முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்,தலைமை நிலைய எழுத்த ராஜகோபால் வரவேற்றார்,நிகழ்ச்சியில் சிவாச்சாரர்களால் யாகம் வளர்க்கப்பட்டு,வேதம் ஓதப்பட்டு அபிஷேக ஆராதனைகள்,சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பாலாலயம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது,
மேலும் இந்நிகழ்ச்சிக்கு திமுக நகரச்செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளிமலை,நெடுமாறன்,பேரூராட்சித் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன்,ஜமீன் விஜயராஜன் மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள் பொன்மணி,ஷர்மிளா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்,முடிவில் அறநிலையத்துறை அலுவலக பணியாளர் அருண்குமார் நன்றி கூறினார்…
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ராஜா
கருத்துகள் இல்லை