• சற்று முன்

    ராயபுரம் போக்குவரத்து காவலர்கள் பில்லியன் ரைடர்களுக்கு தலைகவசம் வழங்கினர்.


    சென்னை ராயபுரம் N1 போக்குவரத்து காவலர்கள் சார்பாக வடசென்னை போக்குவரத்து துணை ஆணையாளர் சரவணன் ஆணைகினங்க,N1 போக்குவத்து காவல் ஆய்வாளர் எடிசன் சாந்தகுமார் தலைமையில் N1 சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் சிவா,N1 போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் டி.மதன் முன்னிலையில் இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பில்லியன் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என  விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைகவசம் வழங்கினர்.

    விழிப்புணர்வு நிகழ்வில் 4சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவது,வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது,குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற சாலைபாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.மேலும் ராயபுரம் போக்குவரத்து போலிசார் வாகன தணிக்கையின்போது இதுவரை மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு 80சதவிகிதம் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளனர் என தெரிவித்தனர்.விழிப்புணர்வு நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சக தலைமைகாவலர்கள் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad