Header Ads

  • சற்று முன்

    காணொளி காட்சி மூலம் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்


    திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் குத்துவிளக்கேற்றி தொடங்கிய மாவட்ட ஆட்சியர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் புதிய அலுவலகம் கட்டிடங்களை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் இன்று திறந்து வைத்தார். 

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பகுதியில் புதிதாக அமைய உள்ள மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்தை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில்., மதுரை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் பாண்டி., திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த புதிய அலுவலகத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்., தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார்., திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

    இதில் தற்காப்பு பணிகள் எப்படி மேற்கொள்வது என்று செயல்முறை விளக்கமும் தீயணைப்பு துறையினர் அளித்தனர். புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தீயணைப்பு வண்டியினை மதுரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்., திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ்., மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நிலையத்திலிருந்து பெரியார், தல்லாகுளம் மற்றும் அனுப்பானடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக தீயணைப்பு வண்டிகள் வரவேண்டும் என்றால் மதுரை மற்றும் திருமங்கலம் பகுதிகளில் தான் வர வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால்., தற்போது இந்த சூழல் மாறி இருக்கிறது. எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருப்பரங்குன்றத்தில் ஒரு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று பலமுறை சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் கூறிக்கொண்டே இருந்தோம் இன்று எங்களது நீண்ட நாள் கோரிக்கை முதல்வர் 110 விதியின் கீழ் கொண்டு வந்துள்ளார். இதை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி என்று உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன் கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad