Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்-இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.  இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர்,தேனி,திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30,க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன. போட்டி சூரங்குடி-தூத்துக்குடி சாலையில் நடைபெற்றது. போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி சிறிய மாட்டு வண்டி  என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து   கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறிய மாட்டு வண்டியில் 17,ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன 6 கிலோமீட்டர்  வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


    இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாக பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இப்போட்டியில் 16,மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன 8 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில்  சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மெடிக்கல் விஜயகுமார் என்பவரது மாடு முதல் பரிசையும் இரண்டாவது பரிசாக கடம்பூர் பகுதியைச் சேர்ந்த கருணாகரராஜா என்பவரது மாட்டு வண்டி பரிசை தட்டி சென்றது. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை முத்தையா என்பவரது மாடும் இரண்டாவது பரிசாக சில சேர்ந்த தண்டபாணி என்பவர் மாட்டு வண்டியும் பரிசை தட்டி சென்றது. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாட்டின்  உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad