சிவகாசி அருகே, மாற்றுத்திறன் குறைபாட்டை கேலி செய்த புதுமாப்பிள்ளை குத்தி கொலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆத்தூர் - சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. இந்த நிலையில் மணிகண்டன், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் முத்துராஜ் (38) என்பவருடன் சேர்ந்து மது குடித்தார். (முத்துராஜ் மாற்றுத்திறனாளியாவார்.) அப்போது மாற்றுத் திறனாளியான முத்துராஜை, மணிகண்டன் கேலி செய்துள்ளார். இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மணிகண்டனின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த மணிகண்டன் அலறியபடி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் மணிகண்டனை உடனடியாக மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மாரனேரி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முத்துராஜை கைது செய்தனர். தனது உடல் ஊனத்தை தனது நண்பர் மணிகண்டன் கிண்டல் செய்ததால், ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று, காவல்துறையினர் கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை